பெரியார் எழுதிய, பேசிய கருத்துக்கள் பெரும் பகுதி கிடைக்காமலிருந்தது. குடி அரசு இதழில் பெரியார் 1925 முதல் 1938 வரையில் எழுதிய கட்டுரைகள் மற்றும் பேச்சுக்களை 2000 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் உழைத்து, சட்டப் போராட்டம் நடத்தி பெரியார் திராவிடர் கழகம் 28 தொகுதிகளாக நூல் வெளியிட்டுள்ளது. இந்த சிறந்த முயற்சியில் பல இலட்சம் ருபாய்களை அவர்கள் இழந்திருக்கிறார்கள். பெரியார் கருத்துக்கள் அடுத்த தலைமுறையினர் அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற அவர்களது நோக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க குடி அரசு தொகுதிகளை வாங்கி படியுங்கள்.
பெரியாரது சிந்தனை எல்லா காலகட்டத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. காலத்திற்கும், சூழலுக்கும் அவரது போரட்ட பயணத்தின் தேவைக்கும் ஏற்ப மாற்றம் பெற்று பெரும் சமூக மாற்ற இயக்கமாக உருமாறிருக்கிறது. அவற்றை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள குடி அரசு தொகுப்பை படிப்பவர்கள் உணர முடியும். இந்நூல்களை சிறப்பாக கடும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு வெளியிட்டுள்ள பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
குடி அரசு தொகுதியிலுள்ள கட்டுரைகள் மற்றும் உரைகள் அனைவருக்கும் சென்று சேரும் விதமாக இவ்வலைப்பதிவில் வெளிவரும்.
No comments:
Post a Comment