30 August 2007

பெரியாரின் பேச்சு - ஒலிவடிவில்

தமிழ் மண்ணின் வீதிகளில் மேடையமைத்து சாதாரண மக்களுக்கு பகுத்தறிவு கருத்துக்களை பரப்பிய தந்தைப் பெரியாரின் குரலை கேட்கும் ஆர்வத்தில் தேடியபோது கிடைத்தது ஒரு ஒலித்துண்டு. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் மீட்க மேடைகள் தோறும் பார்ப்பனீயவாதிகளின் புரட்டுக்களை, கட்டுக்கதைகளை, சுயமரியாதைக்கு எதிரான கொடுமைகளை தனக்கே உரிய கேலியும், கிண்டலும், கோபமும் பொங்க மக்களிடம் விளக்கிய பெரியாரின் குரல்.

Get this widget | Share | Track details


சொந்த சொத்துக்களை சுயமரியாதை பகுத்தறிவு பிரச்சாரத்திற்காக செலவிட்ட பெரியார் பொதுவாழ்க்கையில் ஒரு உதாரணம். தமிழகத்தின் ஆளுமைமிக்க தலைவர் பெரியார்.

2 comments:

மாசிலா said...

நன்றி திரு.

இப்போதுதான் முதன் முறையாக
இவ்வளவு நீள உரையை கேட்கிறேன்.

எங்கிருந்து இதை கண்டுபிடித்தீர்கள்?

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

thiru said...

மாசிலா,

இது தான் நான் கேட்ட முதல் நீள பெரியார் பேச்சு. எங்கிருந்து கிடைத்தது என நினைவு இல்லை. நீண்டகாலமாக எனது சேமிப்பில் இருந்தது. நிச்சயமாக இந்த ஒலிப்பதிவை பத்திரப்படுத்தியவர்களுக்கு நன்றிகள் பல.