பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான். கு.16.11.30;7)
பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள். (கு.8.2.31;12:2-1)
இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். (கு.28.4.35;5:1)
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. (கு.16.6.35;7:3)
தொடரும்...
5 comments:
அன்புள்ள திரு... நல்ல பதிவுகள் .. முயற்சி தொடரட்டும். மேலும் ஒரு சிறிய வேண்டுகோள். கருப்பு வண்ண பின்னனியில் உங்கள் பதிவுகளை படிப்பது மிகவும் சிறமமாக இருக்கும். கண்களுக்கு அழகாய் இருக்கும் அல்லது அயர்ச்சி தறாத வடிவமைப்புக்கு மாற்று வீர்களா?
வாழ்த்துக்களுடன்....
மகேந்திரன்.பெ
நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்..
நன்றி நண்பர்களே!
மகேந்திரன் உங்களது அறிவுரை ஏற்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பின்னணியை இன்னும் கண்ணுக்கு இனியதாக மாற்றலாம்.
தொடர்ந்து இணைந்திருங்கள். பெரியார்ம் பெரியாரியல் பற்றிய உங்களது பதிவுகளுக்கு இணைப்புகளையும் கொடுங்கள்.
அன்புடன்
திரு
super ayya .......
super ayya .......
Post a Comment