30 August 2006

பெரியார் சிலையும் இராமனுக்கு செருப்பு மாலையும்

தமிழகத்தின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு ஆளரவமற்ற இரவுப்பொழுதில் நெற்றிப்பட்டை, மாலையிட்டு, திரி கொழுத்தி வைத்து மகிழ்ந்திருக்கிறது வக்கிர செயல் பிடித்த கூட்டமொன்று அவரவரது வக்கிரங்களின் அளவிற்கேற்ப இந்த இழிசெயலை ஆதரித்து தன் மன வக்கிரங்களை பதிவிலேற்றி. சக வலைப்பதிவாளர்களும் மகிழ்கின்றனர். பெரியார் மீது ஏன் இந்த வக்கிரம்?

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுள், வேதம், சாத்திரம், ஆச்சாரம், ஆகமம், பூசணிக்காய் என மக்களை அடிமைப்படுத்திய கூட்டத்தை, அதன் கருத்தியலை துணிந்து எதிர்த்து உடைத்தெறிந்தவர் தந்தை பெரியார். கடவுள் இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் அயோக்கியன் என்று வெளிப்படையாக பேசி தான் தனது உரையையே துவக்கியவர் அந்த அறிவு மேதை. கடவுள் என்ற பெயரில் காட்டுமிராண்டி உலகத்தை விட கேவலமான சாதி அடிமைத்தனத்தை வகுத்து, அதை கட்டிக்காத்து மக்களை அடிமையாக்கிய பார்ப்பனீயத்தையும் அதன் ஆணிவேரையும் அசைத்தன பெரியாரின் வைக்கம் கோவில் நுளைவு போராட்டம்.

நம்பூதிரி என்று அழைக்கப்படுகிற கேரள பிராமணர்களால் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதியாது தடுத்து, வீதிகளில் கூட மனிதனாக நிமிர்ந்து நடக்க விடாமல் அடக்குமுறை நடத்திய அவல நிலையை அகற்ற ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் கிழர்ந்தெழுந்தார். போராட்டம் வலுபெற்றதும் அதன் முடிவில் பார்ப்பனீயம் ஆட்டம் கண்டது. அதனால் தான் வைக்கம் வீரர் பெரியார் என அழைக்கப்பட்டார். இன்றும் அந்த கேரள வாழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரியார் தலைவர் என்பது வரலாறு.
அதன் தொடர்ச்சியாக அவர் கண்ட களங்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மகக்ளின் விடுதலையை, விடியலை, சமூக சமநிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு சுழன்றது. இறப்பிற்கு முந்தைய நாள் வரை தான் கொண்ட கருத்தை, கொள்கையை உறுதியாக உரக்க உரைத்து தமிழர்களின் வாழ்வில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். தனது தொன்னூற்றி ஐந்தாம் வயதில் கூட மூத்திரப்பையை ஒரு கையில் சுமந்த படி நோயிலும் சுழன்று சூரியனாய் மூடக்கருத்துக்களை எதிர்த்து அடக்குமுறையாளர்களுக்கு சவாலாக இருந்து பார்ப்பனரல்லாத மக்களின் காப்பரணாக விளங்கிய மாமனிதர் அவர். தனது சொந்த பணம் சொத்து அனைத்தையும் அறிவுக்கருத்துக்களை பரப்ப செலவிட்டவர். தனது பயணங்களை மிக மிக சிக்கன செலவில் நடத்தி அடித்தட்டு மக்களின் பள்ளிக்கூடங்களாக அறிவு மிகுந்த சொற்பொழிவுகளால் மாலை நேர பொதுக்கூட்டங்கள், பாசறைகள், பத்திரிக்கைகள் என பன்முக பிரச்சாரத்தை சொந்த பணத்தில் நடத்திய உன்னத மனிதர்.

ஒரு வலைப்பபதிவில் பின்னூட்ட நாயகர் ஒருவர் உமிழ்ந்தது //ராமசாமி நாய்க்கருக்கு சிலை வச்சதே அந்த ஆளாட கொள்கைக்கு விரோதம், அப்புறம் அதுக்கு என்ன செஞ்சா இவனுகளுக்கு என்ன?ஊருக்கு ஒரு பத்து பேரு இருந்துகிட்டு இவனுக சவுண்டு தாங்கல.எல்லாம் ரிடயர் ஆகி மண்டைய போடுற வரைக்கும் இப்படியே தான் கம்பத்துல கட்டி வச்ச நாய் மாதிரி - ஒரே சவுண்டா இருக்கும்.//

பார்ப்பனீய திமிர் பிடித்து இன்றும் சாதி அடைமொழியிட்டு தான் மனிதனை அழைப்போம் என்பவர்களை என்னவென்பது? என்ன படித்து என்ன பயன்? பார்ப்பனீயம் இரத்த நாளமெங்கும் சுரக்கும் வரை இவர்களது சாதி வெறி அடங்கப்போவதில்லை. பெரியாருக்கு சிலை வைப்பது அவரது கருத்துக்களுக்கு எதிரானது என இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து புதையல் கிடைத்ததோ? இது விடயத்தில் பெரியார் கருத்துக்களுக்கு காவல்காரர்கள் போல முகமூடியணிவது இவர்களது பார்ப்பனீய சாயம் வெளுக்கிறது என்பதன் அடையாளமே. கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாசாலையில் சிலை வைக்க காரணமாக இருந்தது தந்தை பெரியார் என்பதும், அறிவு மேதை சாக்கிரட்டீஸ் சிலை அருகில் நின்று தன்னை படம் பிடித்து, தானும் சாக்கிரட்டீஸ் போல அறிவுக்கருத்துக்களை பரப்புபவர் எனபதை அறிவித்ததும் இவர்களுக்கு புரியுமா? ஊர்வன, பறப்பன என பல வடிவங்களில் சிலை வடித்து கட்டுக்கதைகளை உருவாக்கி மக்களை விலங்குகளை விட கேவலமாக்கிய மூடத்தனத்தை எதிர்த்தவர் பெரியார். ஒட்டு மொத்தமான சிலைகளின் எதிர்ப்பாளரல்ல என்பதை பெரியாருக்கு சிலை சரியானதா என வினவுபவர்கள் சரிவர புரிந்து கொள்ளட்டும்.

இராமன் சிலைக்கு செருப்பு மாலையிட்டார் பெரியார் இது ஒன்றும் இரகசியமல்ல. நீதிமன்ற வழக்காகி, பெரியாரே அந்த வழக்கில் வாதாடினார் எதற்காக இராமனுக்கு செருப்பு மாலையிட்டார் என நீதிமன்றத்திலேயே தெளிவுபடுத்தினார். தான் செய்த செயலை ஒப்புக்கொண்ட வல்லமை படைத்தவர் பெரியார். எதற்காக இராமனுக்கு செருப்புமாலை? தமிழ் மக்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களது ஆரிய் அடையாளமான இராமனுக்கு செருப்பு மாலையிட்டார் பெரியார். தமிழ் மன்னர் இராவணனை கொடியவனாக சித்தரித்த கட்டுக்கதையான ஆரிய படைப்பான இராமாயணத்தையும் அதனுள் இருக்கும் ஆரிய சூழ்ச்சியையும் எதிர்த்தவர் பெரியார். இராவணனை பொம்மை உருவாக செய்து இழிவுபடுத்தி கொழுத்தி மகிழ்ந்த ஆரிய லீலா கூத்தை எதிர்க்கும் விதமாக இராமனுக்கு செருப்பு மாலையணிந்தார் பெரியார். இது ஒன்றும் இரகசியமல்ல. நாட்டார் வழக்கியல் தெய்வங்களுக்கு பெரியார் செருப்பு மாலையிட்டாரா? இல்லையே ஏன்? பார்ப்பனீய எதிர்ப்பின் ஒரு அம்சமாகவே பெரியாரின் செருப்பு மாலை போராட்டம் அமைந்திருந்தது.

பெரியார் இந்துக்களை அவமதித்தார் என கூக்குரலிடுபவர்கள் பதில் சொல்லுங்கள், ஆதிக்க சாதியினரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும் சமமா? அப்படியெனில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசு ஆணை வந்ததும் ஏன் இவ்வளவு ஆர்ப்பட்டம்? கோயிலில் நீ உயர்சாதியா, மற்றவர்கள் இழிந்த சாதியினரா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகி வழிபாடு நடத்தினால் சாமிக்கு கோபம் வந்து கைலாயத்துக்கு போய் விடுமா? இறைவன் முன் அனைவரும் சமம் என்கிற தத்துவங்கள் பிறந்த உலகில் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதி மட்டுமே கோயிலில் வழிபாடு நடத்தலாம் என்கிற வெங்காயங்களை என்ன என்று சொல்வது? இப்படி இருக்கையில் நீயும் நானும் அவனும் இந்து என்பது மோசடி இல்லாமல் வேறு என்ன?

பெரியார் சிலைக்கு வணக்கம் தானே செய்திருக்கிறார்கள் மகிழுங்கள் என்கிற அடக்கமான நடுநிலைவாதிகளுக்கு; சரித்திரத்தில் பார்ப்பனீயம் இப்படி சீர்திருத்தத்திற்காக போராடியவர்களை கடவுளின் அவதாரம் என பார்ப்பனீய தத்துவத்தில் உள்ளடக்கி நீர்த்து போக வைத்த வரலாறு மறந்திருக்கலாம். புத்தர், நந்தனார், நாராயணகுரு, முத்து குட்டி சாமி என அந்த மாமனிதர்களின் பட்டியல் நீளமானது. தனக்கு எதிராக புரட்சி செய்பவர்களை அவதாரமாக்கிவிட்டால் அவர்களது கொள்கை, போராட்டம் மறைக்கப்படும் என்பது பார்ப்பனீய தந்திரம். அந்த தந்திரத்தை பெரியார் விடயத்தில் சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்த முயல்கிறார்களா? அது பெரியார் விடயத்தில் வெற்றியடைவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை காலம் உணர்த்தும்.

எந்த கருத்தியலை பெரியார் எதிர்த்தாரோ அந்த கருத்தியல் கொண்ட அடக்குமுறையாளர்களின் பாசிச் வக்கிரங்கள் தான் இன்று திண்டுக்கல்லில், வலைப்பூக்களில் என எதிரொலிக்கின்றன என்பதில் வியப்பில்லை. பகுத்தறிவு இயக்கம இப்படிப்பட்ட 'வேடமிட்டு அலைகிற அதிமேதாவிகளை' சந்தித்து தான் வளர்ந்தது. இந்த இழிசெயல் புரிபவர்களையும் அவர்களுக்கான இடத்தில் அனுப்பி வைக்குமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த வக்கிரத்தையும் பகுத்தறிவு இயக்கங்கள் சந்திக்கும். சிலையாகியும் பார்ப்பனீயத்தை பதற வைக்க பெரியாரால் முடிகிறது. அந்த விதத்திலும் அய்யா பெரியார் தான்!

திரு

24 comments:

கோவி.கண்ணன் [GK] said...

திரு...!

சொல்லவந்தததை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

பாராட்டுகள் !

ஜயராமன் said...

ஐயோ பாவம்!

பெரியார் தொண்டர்களை நினைத்தால் பாவமாய் இருக்கிறது.

சந்தனம் பூசி, மாலை போட்டு இழுக்கு செய்தவன் ஒரு பாப்பான் தான் என்று எல்லோரும் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டோம். அந்த தாடியை ஒரு மண்டலம் கருப்பு சட்டை போட்டு பூசை செய்தால் இந்த தெய்வீக திருஷ்டி தெரியும்.

நன்றி

அருண்மொழி said...

//புத்தர், நந்தனார், நாராயணகுரு, முத்து குட்டி சாமி என அந்த மாமனிதர்களின் பட்டியல் நீளமானது.//

இந்த listல் வள்ளலாரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அருண்மொழி said...

//சிலையாகியும் பார்ப்பனீயத்தை பதற வைக்க பெரியாரால் முடிகிறது. அந்த விதத்திலும் அய்யா பெரியார் தான்!//

மிகச் சரியான வார்த்தைகள்.

Anonymous said...

ஏய்யா லூசாட்டம் கத்திகிட்டு இருக்கீங்க...

மொதல்ல அந்தாள் கொளுகைக்கு வெரோதமா அந்தாளுக்கு செல வச்சதே தப்பு...
அதுல சந்தனம் பூசுனா என்ன, சாணி பூசுனா என்ன?

போயி இந்தில எழுதியிருக்குறதுல தார் பூசுர வேலையப் பாருங்கய்யா..போங்கய்யா.

அருண்மொழி said...

//சந்தனம் பூசி, மாலை போட்டு இழுக்கு செய்தவன் ஒரு பாப்பான் தான் என்று எல்லோரும் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டோம்.//

பாப்பான் என்றைக்கு தெகிரியமாக முன்னே வந்து காரியங்களை செய்வான்? (சங்கரராமனை முடிக்க ஒரு கதிரவனும்,அப்புவும் தானே தேவைப்பட்டது). உஞ்சவிருத்திகள் தூண்டலின் விளைவாக நடந்த பன்றிகளின் செயல்தான் இது.

Unknown said...

திரு நாம என்னதான் கத்துனாலும் திருந்தாத சென்மங்கள் இருக்கும் வரை இதெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது நாம என்ன செய்ய கொட்டுற உப்பெல்லாம் இந்த மாதிரி "கடல்ல" கறையுதேன்ன்னு கவலைபடாதீங்க உப்பு தேவைப் படுபவன் கண்டிப்பா எடுத்துப்பான் என்னா நான் சொல்லறது ?

thiru said...

//ஜயராமன் a dit…
ஐயோ பாவம்!

பெரியார் தொண்டர்களை நினைத்தால் பாவமாய் இருக்கிறது.//

ஜயராமன் வருகைக்கு நன்றி!

பெரியார் தொண்டர்கள் உங்களது இரக்கத்தை தேடும் நிலையில் இல்லை. இது பெரியார் மீது கொண்ட கோபத்தை தணிக்கும் விகாரமா?

//சந்தனம் பூசி, மாலை போட்டு இழுக்கு செய்தவன் ஒரு பாப்பான் தான் என்று எல்லோரும் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டோம். அந்த தாடியை ஒரு மண்டலம் கருப்பு சட்டை போட்டு பூசை செய்தால் இந்த தெய்வீக திருஷ்டி தெரியும். நன்றி//

பார்ப்பனீய இந்துத்துவமயனான நாட்டில் பார்ப்பனர் ஒருவர் தான் செய்யவேண்சும் என அவசியமில்லை. கூலி அடிமைகள் பலர் உண்டு. மண்டைக்காடுகலவரம் முதல் குஜராத் படுகொலை வரை இதற்கு பல சாட்சி. பின்னால் இருந்து இயக்குவது ஆதிக்க சாதியினரின் தந்திரோபாயம் என்பதை மண்டைக்காடு முதல் குஜராத் வரை நிரூபித்திருக்கிறது. இது தான் சாணக்கியத்தனமோ?

thiru said...

||உக்கிரசேனா a dit...
ஏய்யா லூசாட்டம் கத்திகிட்டு இருக்கீங்க...மொதல்ல அந்தாள் கொளுகைக்கு வெரோதமா அந்தாளுக்கு செல வச்சதே தப்பு...
அதுல சந்தனம் பூசுனா என்ன, சாணி பூசுனா என்ன?போயி இந்தில எழுதியிருக்குறதுல தார் பூசுர வேலையப் பாருங்கய்யா..போங்கய்யா.||

உக்கிரசேனா, பெரியார் கருத்துக்களுக்கு நீர் தான் கையேடா? பெரியார் பற்றியும் அவரது கருத்துக்கள் பற்றியும், சிலை வைப்பது அவரது கருத்தியலுக்கு எதிரானதா என்பது பற்றியும் படித்து பின்னர் வாருங்கள்! குறைந்த பட்சம் இந்த பதிவை படித்த பின்னர் பின்னூட்டமிடுங்கள்! அவசரம் வேண்டா! இன்று போய் நாளை வா (உங்கள் கதை நாயகன் இராமன் பாணியில் படிக்கவும்)

thiru said...

கோவி.கண்ணன்ம, அருண்மொழி, மகேந்திரன் அனைவருக்கும் நன்றி!

உண்மைகளை உரக்க சொல்வதில் தப்பில்லையே! அய்யா அதை தான் கற்றுத் தந்தார். புரிந்துகொண்டு வாழ்வது அவரவரது விருப்பம் இல்லையா?

Anonymous said...

தலை...பெரியாரை பின் நவீனத்துவம் பார்க்கிறது...

அவன் பாப்பான், இவன் பாப்பான், உங்கள எதிர்த்தவன் எல்லாரும் பாப்பான்னு சொல்லியே நாசமா போயிட்டீங்கய்யா நீங்க...

//
தனக்கு எதிராக புரட்சி செய்பவர்களை அவதாரமாக்கிவிட்டால் அவர்களது கொள்கை, போராட்டம் மறைக்கப்படும் என்பது பார்ப்பனீய தந்திரம்.
//

ஒண்ணுமே வேணாம், பெரியாரை அவதாரம் ஆக்கக் கூடாது என்று பாப்பான் கத்துனா போதும்...

ஆட்டோமேடிக்கா உங்கள மாதிரி உள்ள பெரியார் மதவாதிகள் அவரை அவதாரமாக்கிவிடுவீர்கள்...!

உங்கள் அறிவு அவ்வளவு தான்...!

//
இந்த இழிசெயல் புரிபவர்களையும் அவர்களுக்கான இடத்தில் அனுப்பி வைக்குமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த வக்கிரத்தையும் பகுத்தரிவு இயக்கங்கள் சந்திக்கும். சிலையாகியும் பார்ப்பனீயத்தை பதற வைக்க பெரியாரால் முடிகிறது. அந்த விதத்திலும் அய்யா பெரியார் தான்!
//

சிலை வழிபாட்டையும் தனி நபர் வழிபாட்டையு (hero worship) எதிர்த்த பெரியாரை உங்களைப் போன்ற மூடர்களிடமிருந்து முதலில் காக்கவேண்டும்..

//
உக்கிரசேனா, பெரியார் கருத்துக்களுக்கு நீர் தான் கையேடா?
//

பின்னெ நீர் தானோ கையேடு!!?
...ஏய்யா உயிரெடுக்குறீங்க...

dondu(#11168674346665545885) said...

முதலில் சிலைக்கு மாலையிட்டது பார்ப்பனரே அல்லது அவரது கைக்கூலிகளே என்ற முடிவுக்கு எவ்வாறு வந்தீர்கள் என்பதை கோபப்படாமல் கூறவும்.

இவர்களைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும் என்ற வாதம் இங்கு எடுபடாது.

மற்றப்படி அவர் சன்னிதியில் மொட்டை போடுகின்றனர், முடியிறக்குகின்றனர் என்றெல்லாம் படிக்கிறோமே அதற்கு என்ன கூறுவீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

தி.ராஸ்கோலு said...

திரு,

சொல்ல வந்த கருத்துகளை ஆணித் தரமாக வைத்துள்ளீர்கள். நன்றி!

பெரியாரை அவரது கருத்துக்களை எதிர்க்க வேண்டிய அவசியம் யாருக்கு உள்ளது என்பது ஊரறிந்த ரகசியம். எனவே ஜெயநாம டோண்டு சேனாக்களை எல்லாம் புறக்கணித்துவிடுங்கள்.

பார்ப்பன்னியத்தில் ஊறித் திளைத்துக் கொழுத்தவர்களுக்கு பெரியார் என்றென்றும் வேப்பங்காய் தான்.

thiru said...

// dondu(#4800161) a dit…
முதலில் சிலைக்கு மாலையிட்டது பார்ப்பனரே அல்லது அவரது கைக்கூலிகளே என்ற முடிவுக்கு எவ்வாறு வந்தீர்கள் என்பதை கோபப்படாமல் கூறவும்.

இவர்களைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும் என்ற வாதம் இங்கு எடுபடாது. மற்றப்படி அவர் சன்னிதியில் மொட்டை போடுகின்றனர், முடியிறக்குகின்றனர் என்றெல்லாம் படிக்கிறோமே அதற்கு என்ன கூறுவீர்கள்? அன்புடன்,
டோண்டு ராகவன்//

அன்பு ராகவன் அவர்களுக்கு,

கோபம் இல்லையே! என் கருத்துக்களில் காரம் தெரியலாம், தனிநபர்கள் யாரிடமும் எனக்கு கோபமில்லை.

பார்ப்பனர் இதை செய்தனர் என எந்த பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்? பார்ப்பனீயம் பெரியாரியல் கருத்துக்களின் எதிரி என்பது கண்கூடான உண்மை. பெரியார் சிலைக்கு நிகழ்ந்த இந்த இழிசெய்லை பிற சம்பவங்களோடு இணைத்து பதிந்திருக்கிறேன்.

வலைப்பதிவுகளில் பெரியார் பற்றிய வக்கிரம் பேசுவதும், அதற்கு நியாயம் கற்பிப்பதும் இயல்பு. இது கருத்து சுதந்திரம் தந்த உரிமை. அந்த அடிப்படையில் இந்த பிரச்சனை தொடர்பாக வலைப்பதிவில் வந்த கேள்விகள், கிண்டல்கள், உள்குத்து, வெளிகுத்து என பல கருத்துக்களை படித்ததன் எதிரொலியாக என் பதிவு. பெரியாரின் பின்னணி, கருத்தியல் அடிப்படையில் இந்த சம்பவத்தை ஆய்ந்திருக்கிறேன். அவ்வளவே!

மற்றபடி, பெரியார் சமாதியில் மொட்டை போடுவது என்பது பெரியார் சாடிய மூடத்தனங்களில் ஒன்று. திருப்பதியில் ஏழுமலையானுக்கு மொட்டை போடுவது போன்றது இது. பெரியார் கருத்துக்களை நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க வேண்டுமே தவிர அவரை தெய்வமாக வணங்கவோ அல்லது மொட்டை போடுதல், கற்பூரம் காட்டுதல் என மூடத்தனங்களில் இறங்க பெரியார் கருத்துக்கள் இடமளிக்காது.

இத்தகைய பழக்கங்கள் நமது மக்களின் வாழ்வில் ஊறிப்போன எச்சங்களுள் ஒன்று என்பது என் தனிப்பட்ட கருத்து.

நன்றி!

thiru said...

//உக்கிரசேனா a dit...
தலை...பெரியாரை பின் நவீனத்துவம் பார்க்கிறது...//
சுட்டிக்கு நன்றி! ரவிகுமார், குணா போன்றவர்களுடைய இந்த கருத்துக்கள் படித்தவை தான். இதற்கு மறுப்பும் வந்திருக்கிறது.

//அவன் பாப்பான், இவன் பாப்பான், உங்கள எதிர்த்தவன் எல்லாரும் பாப்பான்னு சொல்லியே நாசமா போயிட்டீங்கய்யா நீங்க...//

நீங்க பார்ப்பனீயத்த வளர்த்து நல்லாயிருங்க! சமூகவேறுபாட்டை உருவாக்கி ஆளுகிற பார்ப்பனீய கொள்கை கழைவதில் நாங்க நாசமா போகட்டும், இந்த நீங்க, நாங்க வேறுபாட்டை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி! வேற என்ன சொல்ல,

//ஒண்ணுமே வேணாம், பெரியாரை அவதாரம் ஆக்கக் கூடாது என்று பாப்பான் கத்துனா போதும்...
ஆட்டோமேடிக்கா உங்கள மாதிரி உள்ள பெரியார் மதவாதிகள் அவரை அவதாரமாக்கிவிடுவீர்கள்...!
உங்கள் அறிவு அவ்வளவு தான்...!//

பெரியார் புனிதர் என சொல்கிற ரகமில்லை. அவர் மனிதனை மனிதனாக மதித்த மனிதர். அது சரி அவதாரங்களுக்கு எதிராக எப்போ பார்ப்பனர்கள் கிளம்பினாங்க? சொல்லவேயில்ல :D

//சிலை வழிபாட்டையும் தனி நபர் வழிபாட்டையு (hero worship) எதிர்த்த பெரியாரை உங்களைப் போன்ற மூடர்களிடமிருந்து முதலில் காக்கவேண்டும்..//

நல்லா படிச்சு பாருங்க! வழிபாடு நடத்துறதை தான் எதிர்க்கிறேன். புரியாவிட்டால் திரும்பவும் படியுங்கள். அடுத்த முறை இன்னும் விரிவாக எழுத முயல்கிறேன்.

//...ஏய்யா உயிரெடுக்குறீங்க...//

விழிப்புணர்வு வந்து மனிதனை மனிதனாக மதித்தால் போதுமானது, மற்ற படி உயிரெடுக்கிற கொள்கையில நமக்கு நம்பிக்கையில்ல. அது சேனாக்களின் கொள்கைன்னு கேள்வி, அது தான் ரன்வீர் சேனா, சிவ சேனா,,,.

உங்களுக்கு அன்பும் மன சாந்தியும் உருவாகட்டும்!

Anonymous said...

//
அது சேனாக்களின் கொள்கைன்னு கேள்வி, அது தான் ரன்வீர் சேனா, சிவ சேனா,,,.
//

எது...போய் குண்டு கட்டுகிட்டு கடவுள் பெயரைச் சொல்லிவிட்டு 72 கன்னிகளுக்காக உயிர மாய்த்துக் கொள்கிறார்களே...அதை சொல்ல மனம் வருமா பெரியாரைப் பேசுபவர்களுக்கு...!!?

//
வழிபாடு நடத்துறதை தான் எதிர்க்கிறேன். புரியாவிட்டால் திரும்பவும் படியுங்கள். அடுத்த முறை இன்னும் விரிவாக எழுத முயல்கிறேன்.
//


அப்படியா? அப்போ, எதுக்கு பாப்பான் பாப்பான்னு கூவிகின்னு இருக்கீங்க ? பூனூல் அறுத்த, குடுமி வெட்டிவிட்ட பெரியாரை, எந்த மடையப்பாப்பானாவது மால போடுவானா (அரசியல் வாதிகள் வோட்டு பொறுக்கிகள் போடுவார்கள், பப்ளிசிட்டிக்காக...!! நடு ராத்திரில யாருக்கும் தெரியாம இல்ல)

முதலில் தமிழகத்தில் நடக்கும் கெட்டவைகளுக்கெல்லாம் பாப்பான் தான் பொருப்பு என்ற வாதத்தினை விடுத்து வெளியில் வந்து பெரியாரிசம் பேசுங்கள்...புத்தியுள்ளவர்கள் கேட்பார்கள்...

பாப்பானை எதிர்ப்பது தான் பெரியார் செய்தார் அதையே நாமும் செய்வோம் என்று மூடத்தனமாக யோசிக்காமல், ஆதிக்க சாதிவெறியை (பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டார்மங்கலம்) தாக்குங்கள்...பெரியார் காலத்தில் ஆதிக்க சாதி பார்ப்பானர்கள்...இன்று பார்பானர்களா அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்தது?

பெரியார் என்றால் பார்பான எதிரி என்று சித்தரிப்பு உங்களைப் போன்ற அறிவாத்மாக்கள் செய்யும் மூட நம்பிக்கையினால் வலுப்பெறுகின்றது...உங்கள் அறிவை திரம்பட பயன்படுத்தவேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்..!

//
அது சரி அவதாரங்களுக்கு எதிராக எப்போ பார்ப்பனர்கள் கிளம்பினாங்க? சொல்லவேயில்ல
//

பார்பானர்களுள் ஒரு கருத்துக்கு மாற்று கருத்து இல்லாமல் இருந்ததே இல்லை. புத்தரை அவதாரமாக ஏற்க சிலர் சொன்னால், ஏற்கமுடியாது என்று சொல்லும் கூட்டம் ஒன்று இருக்கிறது...அதே போல் தான்...!! பார்பானர்களை எதிரியாகவே பார்த்த உங்கள் மூளைக்கு பார்ப்பானர்களின் அறிவைப் பார்க்கும் அளவிற்கு மூளை வளர்ச்சி அடையாதது ஒன்றும் வியப்பில்லை.

Izzath said...

எந்த கருத்தியலை பெரியார் எதிர்த்தாரோ அந்த கருத்தியல் கொண்ட அடக்குமுறையாளர்களின் பாசிச் வக்கிரங்கள் தான் இன்று திண்டுக்கல்லில், வலைப்பூக்களில் என எதிரொலிக்கின்றன என்பதில் வியப்பில்லை. பகுத்தறிவு இயக்கம இப்படிப்பட்ட 'வேடமிட்டு அலைகிற அதிமேதாவிகளை' சந்தித்து தான் வளர்ந்தது. இந்த இழிசெயல் புரிபவர்களையும் அவர்களுக்கான இடத்தில் அனுப்பி வைக்குமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த வக்கிரத்தையும் பகுத்தறிவு இயக்கங்கள் சந்திக்கும். சிலையாகியும் பார்ப்பனீயத்தை பதற வைக்க பெரியாரால் முடிகிறது. அந்த விதத்திலும் அய்யா பெரியார் தான்

GREAT Mr.THIRU
For writing on this issue.
Continue to expose the evils of uppercast and fundamentalist fascist forces such as RSS and gang in your blogs.
Thank you once again.
Izzath

அசுரன் said...

பாப்பன குஞ்சுகள் தைரியமா ரோட்டில இறங்கி மற்ற மா நிலங்களில் கூத்தாடுவது போல இங்கு தமிழ் நாட்டில் கூத்தாட முடியவில்லையென்னு அரிப்பெடுத்துப் போய் ரொம்ப நாளா அலைஞ்சாங்க....

இப்போ அவிங்க அரிப்ப சொறிஞ்சு விடுறதுக்கு ஏதோ ஒரு பன்னி பெரியார் சிலையை அசிங்கம் செஞ்சிருக்கு..

இதுலயும் அம்பலப்படுறது அந்த மக்கள் விரோத பன்னிக் கோஸ்டிதான்...

எப்படின்னா...

பெரியார் மக்கள்ட்ட பொதுகூட்டம் நடத்தி வெளிப்படையா செருப்பு மாலை போட்டாரு... மக்களுக்கு அதுல ஒப்புதல் இருந்தனாலதான் அவரு இன்னிக்கும் தமிழகத்தின் தவிர்க்க இயலா சக்தி....

ஆனா பெரியார் சிலையை அசிங்கம் செஞ்சி அரிப்ப சொறிஞ்சுக்கிட்ட அந்த பன்னிகளும், அதை மிகப் பெரிய சாதனை போலவும் அதனால் பெரியாருக்கு அவமானம் என்பது போலவும் சிலாகிக்கும் 'வக்கிர' 'மோச'மான வலைப்பூ பன்னிக் குழுமமும் உண்மையில் அசிங்கப்பட்டிருப்பது தாங்கள்தான் என்பதை உணரும் அளவுகூட மூளையற்ற ஒரு கூட்டமாக உள்ளது...

அவர்களுக்கு ஒரு பந்தயம்... தைரியமிருந்தால்... வெளிப்படையாக அறிவித்து பெரியாரின் சிலையை அசிங்கப்படுத்தி விட்டு தமிழ் நாட்டில் நடமாட ஒரு பெற்றோருக்கு பிறந்த எவனும் வரலாம்....

அப்படி ஏதேனும் ஒரு பெற்றோருக்கு பிறந்த ஒருவனை அந்த பன்னிக் கூட்டம் கண்டுபிடித்து விட்டு பிறகு கூப்பாடு போட்டல் அதில் ஒரு அர்த்தம் உள்ளது.

அந்த மாதிரி நேர்மையா செயல் படுவதெல்லாம் கனவில் கூட அவர்களுக்கு சாத்தியமில்லை.... அப்புறமில்ல ஒரு பெற்றோருக்கு பிறந்தவன கண்டுபிடிக்கிறது.

********


திரு,

உங்க பேருல ஒரு கமெண்ட மாடரேட் பன்னினேன். ஆனால் ப்ளாக்ல வந்து பார்த்தா கமெண்ட காணோம்...

மெயில் பெட்டிலிருந்த திரும்ப எடுத்துப் போடுரேன்.

நன்றி,
அசுரன்.

Anonymous said...

//உக்கிரசேனா said...

ஏய்யா லூசாட்டம் கத்திகிட்டு இருக்கீங்க...

மொதல்ல அந்தாள் கொளுகைக்கு வெரோதமா அந்தாளுக்கு செல வச்சதே தப்பு...
அதுல சந்தனம் பூசுனா என்ன, சாணி பூசுனா என்ன?

போயி இந்தில எழுதியிருக்குறதுல தார் பூசுர வேலையப் பாருங்கய்யா..போங்கய்யா.
//

உக்கிரசேனா உண்மைய சொல்லு நீதான லூசு....

Anonymous said...

//
பார்ப்பானர்களின் அறிவைப் பார்க்கும் அளவிற்கு மூளை வளர்ச்சி அடையாதது ஒன்றும் வியப்பில்லை.
//

காமடி கீமடி பண்ணலையே .....

Anonymous said...

பெரியார் செருப்பு மாலையை அனைவருக்கும் தெரிய பகலில்தான் போட்டார். இங்கே இரவில் யாருக்கும் தெரியாமல் பூசை செய்தவர்கள் கோழைப் பார்ப்பனீயப் பூசாரிகளே.
- விஜி

Anonymous said...

சாந்தசேனா

காமெடிப் பின்னூட்டம்யா..
இசுலாமியப் பயங்கரவாதம் பத்திப்பேசும் போது 72 கன்னி குண்டு இன்னும் இது போல சிந்துபாடுங்கள்.

//பார்பானர்களை எதிரியாகவே பார்த்த உங்கள் மூளைக்கு பார்ப்பானர்களின் அறிவைப் பார்க்கும் அளவிற்கு மூளை வளர்ச்சி அடையாதது ஒன்றும் வியப்பில்லை.//

ஊரை அடித்து உலையில் போடும் அந்தப் புத்தி யாருக்கும் வரவேணாம். அப்படிப்பட்ட முளைவளர்ச்சி வேணாம்.

குழலி / Kuzhali said...

// சரித்திரத்தில் பார்ப்பனீயம் இப்படி சீர்திருத்தத்திற்காக போராடியவர்களை கடவுளின் அவதாரம் என பார்ப்பனீய தத்துவத்தில் உள்ளடக்கி நீர்த்து போக வைத்த வரலாறு மறந்திருக்கலாம். புத்தர், நந்தனார், நாராயணகுரு, முத்து குட்டி சாமி என அந்த மாமனிதர்களின் பட்டியல் நீளமானது. தனக்கு எதிராக புரட்சி செய்பவர்களை அவதாரமாக்கிவிட்டால் அவர்களது கொள்கை, போராட்டம் மறைக்கப்படும் என்பது பார்ப்பனீய தந்திரம். அந்த தந்திரத்தை பெரியார் விடயத்தில் சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்த முயல்கிறார்களா? அது பெரியார் விடயத்தில் வெற்றியடைவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை காலம் உணர்த்தும்.
//
எப்படிங்க... இரண்டு மாதங்களுக்கு முன் இதே கருத்தை வைத்து ஒரு உரையாடல் கட்டுரை எழுத ஆரம்பித்தேன், இன்னமும் அது முடியவில்லை அதே கருத்தை இங்கே சொல்லியிருக்கின்றீர்....

நன்றி

Anonymous said...

உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது.
இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?

தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.